Categories
உலக செய்திகள்

Brand-செருப்புகளை மட்டும் திருடும் பூனை…. வைரல் வீடியோ…..!!!!!

சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து செருப்புகள் காணாமல் போவது தொடர்கதை ஆகி வந்தது. அதன் பிறகு அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது திருட்டு வேலையில் ஈடுபட்டது பூனை என தெரியவந்துள்ளது. அதனைப்போலவே திருடப்பட்ட அனைத்து செருப்புகளும் பிரபல நிறுவனங்களின் செருப்பு என்று கூறப்படுகிறது.

தற்போது பூனை செருப்பை கவ்விக் கொண்டு செல்லும் காட்சி இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழையும் பூனை, யாராவது இருக்கிறார்களா என சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு செருப்பை அலேக்காக வாயில் கவ்விக் கொண்டு செல்கிறது.

Categories

Tech |