ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் முன்னிலையில் கேமரா ஓடிக் கொண்டிருப்பதை அறியாமல் ஒரு மாணவன் பெண்ணுடன் தவறான உறவில் ஈடுபட்ட அதிர்ச்சி வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக பல நாடுகளில் கடந்த வருடத்திலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இணையவழியில் தான் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே மாணவர்கள் வீட்டிலிருந்து பாடங்களை கவனிப்பதால் வீடியோவை ஆன் செய்து விட்டு சிலர் தூங்கிவிடுகிறார்கள்.
மேலும் சிலர் சாப்பிடுவது, விளையாடுவது என்று பல வேலைகளை செய்து வருவது நடந்து கொண்டு இருக்கிறது. இதில் ஒரு மாணவரின் செயல் கடும் அதிர்ச்சியையும், தர்ம சங்கடத்தையும் உருவாக்கியது.
அதாவது, வியட்நாமில் உள்ள ஹோ சி மின் என்ற நகரில் வசிக்கும் ஒரு கல்லூரி மாணவர் ஆன்லைன் வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது, வீடியோ ஓடிக்கொண்டிருப்பதை கவனிக்காமல் ஒரு பெண்ணுடன் தவறான உறவில் இருந்துள்ளார். வகுப்பு நடந்து கொண்டிருந்ததால், பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியர் முதல் மாணவ மாணவிகள் என்று அனைவரும் அதனை பார்த்து அதிர்ந்து போய் விட்டனர்.
உடனடியாக அந்த பேராசிரியர் மாணவரை எச்சரித்தார். அதன் பின்பு பதறிப்போன மாணவர், தன் உடைகளை எடுத்து உடுத்தியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதனை பார்த்த பலர் அந்த மாணவரை கிண்டல் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் அந்த மாணவர் தன் செயலுக்கு வருந்தி, தன் வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திற்கு மன்னிப்பு கடிதம் அனுப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.