Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“ஆடையில்லா சிறுவன்” உடையை விட…. முகக்கவசம் தான் முக்கியம்…. துணை ஆணையரின் விழிப்புணர்வு பதிவு…!!

உடுத்தும் உடையை விட, முகக்கவசம் தான் மிக முக்கியம் என நெல்லை மாநகர நகராட்சி துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை தடுப்பதற்கு கடைபிடிக்கப்படும் விதிமுறைகள் என்னவென்றால், சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கட்டாயம் முகக் கவசம் அணிவது இவை இரண்டும்தான். இதை பெரும்பாலானோர் பின்பற்றாததன் விளைவே இன்றைக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்ததுக்கு காரணம். இந்த முக கவசம் அணிவது குறித்தும், சமூக இடைவெளியை பின்பற்றுதல் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு புகைப்படங்கள், வீடியோக்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இருப்பினும், பொது மக்கள் அதனை கடைபிடிப்பதில்லை. இந்நிலையில் நெல்லை மாநகரின் நகராட்சி துணை ஆணையர் தனது ட்விட்டர் பக்கத்தில் சிறுவன் ஒருவனின் புகைப்படம் வெளியிட்டு முககவசம் அணிவது குறித்து வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு செய்துள்ளார். அதில், காட்டப்படும் புகைப்படத்தை வெளியிடப்பட்டு உள்ள அவர், சிறுவன் முகக்கவசம் மட்டும் அணிந்து உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் கடைக்கு பொருட்களை வாங்க வந்துள்ளான்.

அதை புகைப்படமாக எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட, நெல்லை மாநகர் துணை ஆணையர் முக கவசத்தின் அவசியத்தை இதைவிடப் பெரிதாக விளக்கிவிட முடியாது, தற்போதைய சூழ்நிலைக்கு மானத்தைக் காக்க உடுத்தும் உடையை விட, உயிரைக் காக்கும் முக கவசம் மேலானது, மிக முக்கியமானது எனவே முகக்கவசம் அணிந்து வெளியே வருவோம் சமூக இடைவெளியை பின்பற்றுவோம் அடிக்கடி கைகளை கழுவிக் கொரோனாவிலிருந்து நம்மை நாமே சுய கட்டுப்பாடுடன் பாதுகாத்துக் கொள்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார். இவரது பதிவு தற்போது டுவிட்டரில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |