ஸ்பெயினில் சிறுவன் போதையில் தன் தாயிடம் தவறாக நடந்து கொண்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயினில் இருக்கும் கிரான் கனேரியா என்ற தீவில் லாஸ் பால்மாஸ் என்ற பகுதியில், வசிக்கும் 16 வயதுடைய சிறுவன், போதையில் தன்னை பெற்ற தாயை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவந்துள்ளது. அந்தப் பெண் தன் மகன் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதாக காவல் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
எனவே காவல்துறையினர் அந்த சிறுவனை கைது செய்துள்ளனர். சிறுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அச்சிறுவன் அதிகமான போதை மயக்கத்தில் இருந்தேன் என்று தெரிவித்துள்ளார். தன் தாயிடம் இவ்வாறு நடந்து கொண்டதே தனக்கு தெரியாது. நான் சுய நினைவில் இல்லை என்று கூறியிருக்கிறார்.
எனவே வழக்கறிஞர் ஒருவர் சிறுவனை டெனெர்ஃப்பில் இருக்கும் சிறையில் அடைக்குமாறு கூறியிருக்கிறார். எனவே கொரோனா நடைமுறைகளை மேற்கொண்டு, சிறுவர் நீதிமன்றத்திற்கு அனுப்பவும், இந்த வழக்கு தொடர்பில் மேலும் விசாரணை நடத்தவும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.
எனினும் இச்சிறுவன் இந்த குற்றத்தை உண்மையில் செய்திருப்பாரா? என்று அறிவதற்காக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். மேலும் சிறுவனிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது எனக்கு நடந்தது எதுவும் நினைவில் இல்லை என்று கூறி கதறி அழுதிருக்கிறார். எனவே அவரை கண்காணிப்பில் வைத்துள்ளனர்.