Categories
உலக செய்திகள்

“அடச்சீ!”…. இப்படியா செய்வது?… வீட்டு வாசலில் வைக்கப்பட்ட பெட்டி…. உள்ளே இருந்தது என்ன தெரியுமா?….

பிரிட்டன் நாட்டில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த அருவருக்கத்தக்க பொருளால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பிரிட்டனில் உள்ள Gloucestershire என்ற நகரத்தில் இருக்கும் Stroud என்னும் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் Siobhan Baillie, அரசியல்வாதிகளுக்கு ஏற்படும் அருவருக்கத்தக்க பிரச்சனைகள், அரசியலில் இருப்பதற்கு பல முறை யோசிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தி இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

அதாவது கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த அவரின் வீட்டின் வாசலில் பெட்டி ஒன்று இருந்திருக்கிறது. அதனை திறந்து பார்த்து அவர் துர்நாற்றத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் வாயை மூடிக்கொண்டு பதறி அடித்து ஓடியிருக்கிறார். அந்த பெட்டியில் மலம் இருந்திருக்கிறது. இந்த அருவருக்கத்தக்க சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Categories

Tech |