Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பழைய செல்போன் வாங்கிய…. பின்னர் வந்த ஒரு அழைப்பால்…. வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்…!!

வாலிபர் ஒருவர் பழைய செல்போன் வாங்கிய பின்னர் மனஉளைச்சலால் உயிரிழந்த சம்பவாம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் பகுதியில் வசித்து வருபவர் லட்சுமணன்( 24). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மூர் மார்க்கெட்டில் உள்ள செல்போன் கடையில் பழைய விலைக்கு செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார். தற்போது சென்னையில் திருட்டுகள் அதிகமாகி வருகிறது. அதிலும் தற்போது ஒரு கொடுமையான விஷயம் என்னவென்றால் செல்போன் பேசிக் கொண்டிருக்கும்போது செல்போனை பிடுங்கி கொண்டு செல்கின்றனர்.

இந்நிலையில் லட்சுமணன்  பெயரில் சிம் வாங்கி செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் லட்சுமணனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு இந்த செல்போன் தொலைந்து போனது எனவே விசாரணைக்காக காவல் நிலையம் வரவேண்டும் என்று கூறியுள்ளனர். காவல்துறையினர் விசாரணையில் லட்சுமணன் தான் செல்போன் கடையில் பழைய செல்போன் வாங்கியதாக கூறியுள்ளார்.

பின்னர் காவல்துறையினர் விசாரணைக்கு அழைக்கும்போது வந்து செல்போன் திருடியவரை அடையாளம் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட லட்சுமணன் தான் தற்கொலை செய்யபோவதாக வீட்டில் கூறியுள்ளார். இந்நிலையில் லட்சுமணன் ரயிலில் அடிபட்டுகிடந்துள்ளார் . அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தற்கொலையா? கொலையா? என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |