சிரியாவின் இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளும் முனைப்பு காட்டுவதால் போர் பதற்றம் நிலவுகிறது.
சிரியாவின் வடக்கு பகுதியில் இருக்கும் இட்லிப் மாகாணத்தில் அரசுக்கு எதிராக செயற்பட்டுவரும் குர்திஷ் போராளிகள் குழுக்கள் மீது ரஷ்யா உதவியுடன் சிரியா இராணுவம் தொடர் தாக்குதல் நடத்திவருகிறது. இதனிடையே இட்லிப் மாகாணத்தில் இருக்கும் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போராளிகள் குழுக்களுக்கு ஆதரவு அளித்து வரும் துருக்கி, அத்துமீறி சிரியாவின் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றது.
துருக்கியின் இந்த செயல்களால் ரஷ்யா கடும் ஆத்திரம் அடைந்துள்ளது. இதேவேளை, இட்லிப் மாகாணம் நைரொப் மற்றும் நய்ரப் பகுதிகளில் இன்று காலை சிரிய அரசுப்படையினர் மீது நடத்தப்பட்ட திடீர் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.