எங்கள் இருவருக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது என்றும் இது ஒருவிதமான குழப்பம்தான் என்றும் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. இது பற்றி கிரிக்கெட் ரசிகர்களுக்கிடையே பெரிய விவாதமே நடைபெற்றது. இந்நிலையில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு புறப்படுவதற்கு முன்பாக கேப்டன் கோலியும், தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் செய்தியாளர்களை சந்தித்து, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
அப்போது கேப்டன் விராட் கோலியிடம், ரோகித் சர்மாவுடன் கருத்து வேறுபாடு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கேப்டன் விராட் கோலி,” நீங்கள் சொல்வதை அனைத்தும் நானும் கேள்விப்பட்டேன். ஒரு அணியின் வெற்றிக்கு ஓய்வறையில் நிலவும் சூழல் மிக முக்கியமானது. அந்த தகவல் உண்மையாக இருந்திருந்தால் நம்மால் நன்றாக விளையாடி இருக்க முடியாது.
மேலும் பேசிய அவர், எனக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் நான் அவரிடம் எப்படி நடந்து கொள்கிறேன் என்பதிலும், என்னுடைய முகத்திலும் நீங்கள் பார்க்கலாம். அது மிகவும் எளிமையான ஒரு விஷயம். ஆனால் நான் ரோகித் சர்மாவை எப்போதுமே பாராட்டி வந்துள்ளேன். ஏனெனில் அவர் சிறந்தவர் என்பதை நான் நம்புகிறேன். எங்கள் இருவருக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது. இது ஒருவிதமான குழப்பம்தான். இதனால் யார் பயனடைகிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை” என்றார்.
I have praised @ImRo45 whenever I have had an opportunity because he has been that good. We have had no issues. We are working towards getting Indian Cricket to the top: @imVkohli #TeamIndia pic.twitter.com/ijGqyKDxtS
— BCCI (@BCCI) July 29, 2019