Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவில் ”போட்டா போட்டி காட்டா குஸ்தி”… ஓபிஎஸ்-ஐ சமாளிக்க ஆளுநரிடம் ஓடிய ஈபிஎஸ்…” – அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆளுநரை சந்தித்தது குறித்து விமர்சனம் செய்துள்ளார். திரு ஓ. பன்னீர்செல்வத்தோடு தன்னை இணைத்து வைத்து,  அப்போது இருந்த ஆளுநர் ஒரு சமரச உடன்படிக்கையை உருவாக்கியதை போல,  இப்போது அதிமுகவினுடைய இரு  அணிகளுக்கும் இடையே நடக்கக்கூடிய இந்த உள்கட்சி போட்டோபோட்டி காட்டா குஸ்தியில் தனக்கு ஒரு சாதகமான நிலையை உருவாக்குவதற்கு அவர் அங்கே போய் முறையிட்டாரா ? என்கின்ற சந்தேகம் எனக்கு வலுவாக எழுதுகிறது.

இன்னொரு பக்கம் தினமும் ஒரு அறிக்கையினை வெளியிட்டு,  ஊடக வெளிச்சத்தை உருவாக்கி,  அதன் வாயிலாக நாங்கள் தான் தமிழ்நாட்டினுடைய எதிர்க்கட்சி என்கின்ற ஒரு தோற்றத்தை தொடர்ச்சியாக எழுப்பி,  அதை நிலை நிறுத்த கூடிய முயற்சியிலே பாஜக ஈடுபட்டிருக்கிற போது…  பாஜகவிற்கு எந்தவித பதிலடியும் கொடுக்க முடியாத எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்,  மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர் என்கின்ற அந்த நினைப்போடு மட்டும் நம்முடைய ஆளுநரை சந்தித்திருப்பது ஏன் ?

ஒருவேளை இப்போதாவது அவருக்கு இந்த விழிப்பு வந்திருக்கிறதே, அவர்கள் யாரை கொளுக்கொம்பாக நம்பி பற்றி கொண்டிருக்கிறார்களோ,  அவர்களே அவர்களுக்கு சத்துருவாக உள்ளே இருக்கிறார்கள் என்ற ஞான உதயம் இப்போதாவது அவருக்கு வந்திருக்கிறதே,  இந்த விழிப்பு வந்திருக்கிறதே என்று நான் நம்புகிறேன்.

ஒருவேளை பாஜகவிலே இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய உள்கட்சி பிரச்சனை உச்சகட்டத்தை எட்டி இருக்கக்கூடிய நிலையில் தமிழ்நாட்டில்…  அதிலிருந்து திசை திருப்புவதற்காக திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒரு கருவியாக மாறி  ஆளுநரை சந்தித்திருப்பதை போன்ற ஒரு நாடகத்தை நடத்தி இருக்கிறாரா ? என்ற கேள்வியும் எனக்குள்ளே எழுகிறது என எடப்பாடி கருத்தை விமர்சனம் செய்தார்.

Categories

Tech |