Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பச்சை குழந்தை என்று பார்க்காமல்…. மருமகளை பழிவாங்க…. மாமியார் செய்த காரியம்….!!

சிவகங்கை மாவட்டத்தில் தனது சொந்த பேரனையே  பாட்டி கடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடியை சேர்ந்தவர்கள் அருண் ஆரோக்கியம் -தைநீஸ்வரி. இருவரும்  காதலித்து வந்த போது அருண் ஆரோக்கியத்தின் குடும்பத்தினர் இவர்களின் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில் தனிக்குடித்தனம் சென்றனர் . குழந்தை பிறந்தால் குடும்பத்தினர் சமரசம் ஆகி விடுவார்கள் என இருவரும் எதிர்பார்த்துள்ளனர்.

இதனிடனையே அவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இருவரின்  எதிர்பார்ப்பின் படி அருணின் தாயார் ராஜேஸ்வரி குழந்தையை பார்க்க தனது மகன் வீட்டிற்கு வந்துள்ளார் . அங்கு சென்ற ராஜேஸ்வரி குழந்தையிடம்  ஆசையாக விளையாடியுள்ளார் . பின்னர் வெளியில் சென்று வருவதாக கூறி குழந்தையை கையில் எடுத்து சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் ராஜேஸ்வரி வீட்டிற்கு வரவில்லை.

பின்பு வீட்டிற்கு வந்த மாமியாரின் கையில்  குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த தைநீஸ்வரி  குழந்தையை கேட்டுள்ளார். அதற்கு ராஜேஸ்வரி குழந்தை விளையாடும் பொழுது காரில் வந்த சில மர்ம நபர்கள் குழந்தையை கடத்தி சென்றதாக கூறியுள்ளார். இதனால் தைநீஸ்வரி  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்பொழுது ராஜேஸ்வரி குழந்தையை அப்பகுதியை சேர்ந்த ஒருவரிடம் கொடுத்ததாக தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் கொடுத்ததோடு புகாரின் பேரில் ராஜேஸ்வரியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |