Categories
பெரம்பலூர் மாநில செய்திகள்

எல்லை பாதுகாப்பு….. வெளியே வர தடை….. கிருமிநாசினி தெளிப்பு….. பெரம்பலூரில் பாதுகாப்பு பணி தீவிரம்…!!

கொரோனா நோய் தொற்றுக்கான பல்வேறு நடவடிக்கைகள் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவானது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், பெரம்பலூர் நகராட்சி நகரம் முழுவதும், கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டன. இதை தொடர்ந்து, நகராட்சி ஆணையர் மன்னன், பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், நகரின் முக்கிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதையடுத்து ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், அவசியமில்லாமல் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் எனவும், முகக்கவசம் மற்றும்  மாஸ்க் அணிய வேண்டுமெனவும் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் அறிவுறுத்தினார். மேலும், மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் போக்குவரத்தானது துண்டிக்கப்பட்டு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |