ஈரோடு, தூத்துக்குடி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஈரோடு தூத்துக்குடி சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் செல்போனில் மிரட்டல் விடுத்தார். இதனைத்தொடர்ந்து அந்த ரயில் நிலைய பகுதிகளில் நடத்தப்பட்ட தீவீர சோதனைக்கு பின்பு அவை வெறும் புரளி என்பது தெரியவந்தது.
இதனிடையே செல்போனில் மிரட்டல் விடுத்த சந்தோஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். பின் மேற்கொண்ட விசாரணையில் திருட்டு செல்போனை பயன்படுத்தி மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்தகட்ட விசாரணையாக வெடிகுண்டு மிரட்டல் கான காரணம் குறித்து அதிகாரிகள்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.