Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்….. பீதியில் பொதுமக்கள்….!!

பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர், இது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு வரும் பயணிகளின் உடைமைகள் மற்றும் அவர்களை போலீசார் தீவிர சோதனை செய்யப்பட்டு பின்னர் அனுமதிக்கப்படுகிறார்கள். பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Image result for பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனைஇலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்_ பட்டத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அடுத்தடுத்து என 8 இடங்களில் குண்டு வெடித்தது. தேவாலயம் , நட்சத்திரவிடுதி மற்றும் குடியிருப்புப்பகுதி என நடத்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இது வரை 359_உயிரிழந்தனர். மேலும் 500_க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Image result for பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை

இதைத் தொடர்ந்து தமிழகத்தின் கடலோர பகுதிகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த்தையடுத்து பொதுமக்களிடையே அச்சத்தையும்,பரபரப்பையும்  ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |