Categories
உலக செய்திகள்

பள்ளிகளுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்….. வாஷிங்டனில் பரபரப்பு…!!!

வாஷிங்டனில் ஒரே வாரத்தில் இரண்டாம் முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் கடந்த புதன்கிழமை அன்று தொடர்ந்து டி.சி.பி.எஸ். மற்றும் டி.சி. சார்ட்டர் ஆகிய 2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து வாஷிங்டன் நகரின் காவல் துறையினர் அந்த பள்ளிகளுக்கு விரைந்தனர்.

உடனடியாக பள்ளியில் இருந்த மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். அதன் பின்பு, அங்கு தீவிரமாக தேடுதல் வேட்டை நடந்தது. ஆனால் வெடிகுண்டுகள் இல்லை.

இதே போன்று, கடந்த செவ்வாய் கிழமை அன்றும், டன்பார் என்ற பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. எனவே, இது தொடர்பில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது இந்த விவகாரத்தில் FBI-யை சேர்ந்த சிறுவர்கள் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Categories

Tech |