Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

13 ஆண்டுகளுக்கு முன்பு இறக்குமதி செய்தது…. ராணுவ அதிகாரிகளின் உதவியோடு…. செயலிழக்க செய்த வெடிபொருட்கள்…!!

காவல்துறையினரின் பாதுகாப்புடன் ராணுவ அதிகாரிகள் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட வெடிபொருட்களை வெடித்து செயலிழக்க செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலைக்கு வெளிநாடுகளில் இருந்து இரும்பு துகள்கள் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஈராக், ஈரான் போரின் போது பயன்படுத்தப்பட்ட ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட பல வெடிபொருட்கள் வெடி மருந்துகளுடன் கலந்து வந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் வெடி மருந்துகளுடன் கூடிய ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட 7 டன் எடை கொண்ட 1628 வெடிப்பொருட்களை கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் துறையினர் தொழிற்சாலை ஒன்றில் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.

இதனையடுத்து ராமச்சந்திரா புரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத வனத்துறைக்கு சொந்தமான ஒரு காலி மைதானத்தில் ராணுவத்தினரின் உதவியோடு இந்த வெடி பொருட்களை செயலிழக்கச் செய்ய திருவள்ளூர் மாவட்ட காவல் துறையினர் முடிவு செய்து அதற்கான அனுமதியை பெற்றுள்ளனர். இதன் முதற்கட்டமாக 622 வெடி பொருட்கள் தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலையில் இருந்து எடுத்து வரப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்புடன் காலி மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அப்போது ராணுவ டாக்டர்கள், 6 ஆம்புலன்ஸ் வாகனங்கள், 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் வெடிபொருட்களை செயலிழக்க வைக்கும் இடத்தில் பெரிய பள்ளங்கள் தோண்டி மணல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர் அந்த இடத்திலிருந்து இராணுவத்தினர் வயர்கள் மூலம் இணைப்பை ஏற்படுத்தி வெடிபொருட்களை செயலிழக்க வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் இந்நிலையில் முதற்கட்டமாக 50 வெடிபொருட்கள் ஒரு முறைக்கு பத்து என்ற எண்ணிக்கையில் செயலிழக்க வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியானது இரண்டு நாட்களுக்கும் மேல் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |