ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாடானது கடந்த மாதம் 15ஆம் தேதி தலீபான்களின் கையில் சென்றது. இதனால், அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானை விட்டு வெளியேறினார். இதனையடுத்து, போதிய உணவு, குடிநீர் மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசிய தேவைகள் இல்லாததால் 5 வயதிற்குட்பட்ட 1 கோடி குழந்தைகள் தவித்து வந்தனர். இந்த அதிர்ச்சிகரமான தகவலை யுனிசெப் வெளியிட்டது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் பி. டி.13 என்ற பகுதியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்துள்ளது. இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஆலில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 7 குழந்தைகள் உட்பட மொத்தம் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவத்தை, அமெரிக்க ராணுவ தலைமையிடமான பென்டகன் உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.