பிரிட்டன் நாட்டின் குடியிருப்பு கட்டிடத்தில் குண்டு வெடிப்பு நடந்ததில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் நாட்டின் ஜெர்சி தீவில் இருக்கும் செயின்ட் ஹீலியர் என்னும் நகரில் மூன்று தளங்கள் உடைய கட்டிட பகுதியில் திடீரென்று வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. குண்டு வெடிப்பு சத்தம் கேட்ட சில நொடிகளில் கட்டிடம் விழுந்து தரைமட்டமானது. அதில் வசித்த மக்கள் இடுப்பாடுகளில் மாட்டிக் கொண்டனர்.
இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து காவல்துறையினரும், மீட்பு குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியை மேற்கொண்டனர். அவசர சேவைகளும் வர வைக்கப்பட்டது. இந்த கோர விபத்தில் ஒருவர் பலியானார்.
படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். பத்துக்கும் அதிகமானோர் காணாமல் போனதால், அவர்கள் ஈடுபாடுகளில் மாட்டியிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விபத்தில் பலியானவர்களுக்கு ஜெர்ஸி தீவின் முதல்வரான கிறிஸ்டினா மூர் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.