சோமாலிய நாட்டில் வாகன வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் எட்டு நபர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சோமாலிய நாட்டின் தலைநகரான Mogadishu-ல் இருக்கும் ஜனாதிபதி மாளிகையின் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியே சென்ற ஒரு வாகனத்தை, காவல் துறையினர் சோதனை செய்தபோது, அந்த வாகன ஓட்டுனர் திடீரென்று வெடிகுண்டை வெடிக்க வைத்தார்.
இதில், ஒரு ராணுவ வீரர் அவருடைய தாய் மற்றும் குழந்தைகள் இருவர் உட்பட எட்டு நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அல்கொய்தா அமைப்புடன் தொடர்பு கொண்ட அல் ஷபாப் என்ற இஸ்லாமிய அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது.
இந்த அமைப்பு, சோமாலிய நாட்டின் அரசை கைப்பற்றி, தங்களின் கடும் இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மேலும், இத்தாக்குதலில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று காவல்துறை அதிகாரி கூறியிருக்கிறார்.