நைஜீரியாவின் ஒரு சிறைசாலையின் தடுப்பு சுவரை தீவிரவாதிகள் பயங்கரமான குண்டுகளை வைத்து தகர்த்ததோடு சிறைக்குள் புகுந்து, துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நைஜீரிய நாட்டில் இருக்கும் கோகி மாகாணத்தின், கப்பா என்ற நகரத்தில் இருக்கும் ஒரு சிறையில், விசாரணை கைதிகள் 224 பேரும், குற்றவாளிகள் 70 பேரும் இருந்திருக்கிறார்கள். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு நேரத்தில், அந்த சிறையின் தடுப்பு சுவரை தீவிரவாதிகள், பயங்கரமான குண்டுகளை வைத்து தகர்த்ததோடு, சிறைக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த பயங்கர தாக்குதலில், சிறைக்காவலர்கள் இருவர் உயிரிழந்தனர். அதன்பின்பு, தீவிரவாதிகள், சிறையில் உள்ள அறைகளின் கதவுகளை உடைத்து கைதிகளை தப்பவிட்டனர். இதில், சுமார் 240 குற்றவாளிகள் சிறையிலிருந்து தப்பித்து விட்டனர்.
இது தொடர்பில் நைஜீரியாவின் உள்துறை மந்திரி ராப் அரெக்பசுலோ தெரிவித்துள்ளதாவது, ‘‘தப்பிய கைதிகளை பிடிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் குறித்த விவரங்களை, ‘இண்டெர்பொல்’ அமைப்பிடம் ஒப்படைத்திருக்கிறோம். நாட்டிலிருந்து அவர்கள் வெளியேறியிருந்தாலும், பிடித்து விடலாம். சிறைக் காவலர்கள் இருவரை கொன்றுவிட்டு, குற்றவாளிகளை தப்பிக்க வைத்த தீவிரவாதிகளை விரைவில் பிடிப்போம்’’ என்று கூறியிருக்கிறார்.