Categories
இந்திய சினிமா சினிமா

பாலிவுட்டில் தொடரும் தற்கொலைகள்… “சுஷாந்தின் நண்பரும் தற்கொலை”…!!

பாலிவுட் நடிகை சுஷாந்த் தற்கொலையை தொடர்ந்து அவரது நண்பரும் தற்போது தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பாலிவுட் நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது நண்பரும் எம்எஸ் தோனி படத்தில் அவருடன் நடித்த சந்தீப் நஹாரும் மும்பை ஜார்ஜியான் பகுதியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹரியானாவில் பிறந்த சந்தீப் நஹாரும் நடிக்கும் ஆசையில் 2009ஆம் ஆண்டு மும்பைக்கு வந்தார். முதல் படம் 2016ம் ஆண்டு எம்எஸ் தோனி படத்தில் நடித்தார்.

இந்த படத்திற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்து நடித்து வந்தார். இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் .நான் தற்கொலை செய்து கொள்ள தன் மனைவி டார்ச்சர் தான் காரணம் எது கடிதம் எழுதி வைத்துள்ளார். இதுகுறித்து மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |