Categories
இந்திய சினிமா சினிமா

பாலிவுட் சூப்பர் ஸ்டார்…. அக்ஷய் குமாருக்கு கொரோனா…. தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டுகோள்…!!

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அக்ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக வீசி வருகிறது. இதில் குறிப்பாக பல திரைப்பிரபலங்கள் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் நடிகர் ஆமிர் கான், மாதவன் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு  தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அக்ஷய் குமாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆகையால் அவர் மருத்துவரின் அறிவுரையின் பேரில் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அக்ஷய்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |