Categories
அரசியல் மாநில செய்திகள்

போயஸ் கார்டன் பக்கம் போகவில்லை… என்ன நடந்தது என்று தெரியவில்லை ? சசிகலா தான் சொல்லணும்… நழுவிய டிடிவி தினகரன் …!!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,  ஊடகங்களில் அம்மா என்கின்ற பெரிய தலைவர், உலகம் போற்றுகின்ற தலைவர், அவருடைய இறப்பில் சந்தேகம் என்று அமைத்த ஒரு ஆணையத்தின் அறிக்கையை போட்டுள்ளீர்கள்.

தூத்துக்குடியில் 22 பேரோட உயிரை குருவியை, காக்க சுடுவது போல் சுட்ட அந்த ஆணையத்தின் அறிக்கையும் வந்துச்சு, நீதிபதி சொன்ன அறிக்கையும் இருக்கிறது. அதை இன்னும் யாரும் குறிப்பிடாமல் இதை மட்டுமே போடுகிறீர்கள், அதையும் போட்டால் மக்களுக்கு நன்றாக தெரியும் என்பது தான் என்னுடைய கருத்து.

2011 டிசம்பர் 19இல் என்னை எல்லாம் அம்மா கட்சியை விட்டு  எடுத்து விட்டார்கள். அதன் பின்பு அம்மாவை 2016 இல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,  செப்டம்பர் 22 வெளியூரிலிருந்து,  25 இல் தான் அம்மாவை சென்று பார்த்தேன். அப்போது மருத்துவமனையில் ICU-வில் இருந்தபோது பார்த்தது தான். இடைப்பட்ட ஆண்டுகளில் போயஸ் கார்டன் பக்கம் போகவில்லை, என்ன நடந்தது என்று தெரியவில்லை ? என்னை விட சின்னம்மா அவர்கள் பதில் சொல்வது தான் சரியாக இருக்கும் என நான் நினைக்கின்றேன்.

நான் இந்த அறிக்கைக்காக வரவில்லை, எப்பவும் தீபாவளி, பொங்கல் நேரத்தில் அவர்களை சந்தித்து,  அவர்களுக்கு துணி எல்லாம் கொடுத்துவிட்டு பார்க்க வருவேன். அதே போல நாளைக்கு நான் ஊருக்கு செல்கிறேன். 24ஆம் தேதி மருது பாண்டியன் நினைவு நாள்..  அங்கு எல்லாம் போகிறேன், தஞ்சாவூருக்கு போகிறேன்… சகோதரி, மகளுக்கு எல்லாம் தீபாவளி பரிசு கொடுப்பது எங்களோடதுல ஒரு பழக்கம், அதனால போறேன்.

அதனால் சசிகலாவிடம் பார்த்துக் கொடுக்கலாம் என வந்தேன். ஆனால் இன்றைக்கு ஆணைய அறிக்கை வந்திருக்கிறது, மற்றபடி ஒன்றுமில்லை. நான் 15 நிமிடம் இருந்திருப்பேன், மற்றபடி ஒன்னும் இல்லை, நான் அதை பற்றி பெரிதாக பேசிக் கொள்ளவில்லை,  அவர்களும் பதில் சொல்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |