Categories
மாநில செய்திகள்

இறைச்சியை நன்கு வேகவைத்து உண்ணுங்கள் – அமைச்சர் விஜயபாஸ்கர்…!!

பறவைக்காய்ச்சல் பரவாமல் இருக்க  இறைச்சியை வேகவைத்து உண்ண வேண்டுமென அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவி வருகிறது. இந்நிலையில் உருமாறிய கொரோனாவும் பரவி மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 கோடி மதிப்பிலான பபுதிய இதய சிறப்பு பிரிவை திறந்து வைத்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகம் முழுதும் 18 மருத்துவமனைகளில் சிறப்பு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் கிராமப்புறங்களில் திடீரென ஒருவருக்கு இதயம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் கட்டமைப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது இந்தியாவின் வட மாநிலமான ராஜஸ்தான், குஜராத் மற்றும் கேரளா மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் கடுமையாக இருப்பதால், தமிழகத்தில் பறவைகள் வராதவாறு எல்லைகளில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். எனவே மக்கள் இறைச்சியை நன்றாக வேக வைத்து உண்ண வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |