ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமரான ஷின்ஜோ அபே துப்பாக்கி சூட்டில் மரணம் அடைந்த நிலையில் அவரின் உடல் டோக்கியோவை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் முன்னாள் பிரதமரான ஷின்ஜோ அபே நேற்று காலை நேரத்தில் நாரா என்ற நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்புறம் நின்ற மர்ம நபர் ஒருவர், திடீரென்று அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள். அவரின் மரணத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டு வருகிறார்கள்.
தற்போது, ஜப்பான் முழுக்க துக்கம் அனுசரிக்கப்படுகிறது. ஷின்ஜோ அபேயின் உடல் டோக்கியோவில் உள்ள ஷிபுயா என்ற பகுதியில் இருக்கும் அவரின் குடியிருப்பிற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.