இந்த முத்திரை உங்கள் உடலில் உள்ள சோர்வினை நீக்கும் தன்மை கொண்டது. ஜீரண சக்தியைக் கூட்டும், நிலம் எனும் பஞ்சபூத சக்தியை அதிகரிக்கும். முத்திரை இந்த பிரித்திவி முத்திரை.
மோதிர விரல் நுனியால் பெருவிரல் நுனியால் தொட்டு ஏனைய மூன்று விரல்களையும் நிமிர்த்தி பிடிக்க வேண்டும். தரையில் துண்டு அல்லது பெட்ஷீட் விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து செய்யலாம். இல்லையென்றால் தரையில் பாதங்களை பதித்தபடி நாற்காலியில் அமர்ந்து செய்யலாம். காலை, மாலை வெறும் வயிற்றில் 20 நிமிடம் செய்யலாம். 10 நிமிடங்களுக்கு நான்கு வேலை செய்யலாம்.
12 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் இதனை செய்ய வேண்டாம். 10 முதல் 20 வயது உள்ள ஆண்கள் இந்த முத்திரையை செய்வதை தவிர்க்கலாம். வளர்ச்சி குறைபாடு உள்ளவர்கள் இதை செய்யலாம்.
பலன்கள்:
உடல் சோர்வை நீக்கும். உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை தரும். தோலை பளபளப்பாக வைக்க உதவும். சீரண சக்தியை அதிகரிக்கும். இந்த முத்திரையை தினமும் செய்யும் போது உடலில் உள்ள திசுக்கள் பலம் பெறும். எலும்புகள் வலுப்பெறும். தசைகள், தோல், சதை பற்று ஆகியவை பலனடையும். அல்சர், குடல் எரிச்சல் போன்ற நோய்களுக்கு இந்த முத்திரை மூலம் தீர்வு கிடைக்கும்.
மஞ்சள் காமாலை, காய்ச்சல் மற்றும் தைராய்டு பிரச்சனைகளை எளிதில் போக்க இந்த முத்திரை உதவும். பிரித்திவி முத்திரை நாள்தோறும் 20 அல்லது 30 நிமிடங்கள் செய்து பாருங்கள். நமக்கு பல நன்மைகள் கிடைக்கும்.