Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!…. வாரிசு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் டாப் ஹீரோக்கள்?…. குஷியில் ரசிகாஸ்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே மற்றும் 2- பாடலான ரஞ்சிதமே தீ தளபதி போன்றவைகள் வெளியாகி  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தெலுங்கில் வாரிசு படமானது வாரசுடு என்ற தலைப்பில் ரிலீசாகும் நிலையில், ஹைதராபாத்தில் பெரிய அளவில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியை நடத்துவதற்கு படகுழு திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஹைதராபாத்தில் நடக்கும் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பிரபல தெலுங்கு டாப் நடிகர்களான பவன் கல்யாண் மற்றும் நடிகர் மகேஷ்பாபு ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் தற்போது விஜய் ரசிகர்களை மிகவும் குஷி படுத்தியுள்ளது.

Categories

Tech |