Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. டிஜிட்டலில் வரும் எம்.ஜி.ஆரின் படம்…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிர்களில் ஒருவர் எம்.ஜி.ஆர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து, இவர் நடிப்பில் வெளியாகி விறுவிறுப்பாக ஓடிய படங்கள் தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு மறு ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஆயிரத்தில் ஒருவன், நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், ரிக்ஷாக்காரன், அடிமைப்பெண் போன்ற படங்கள் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு மறு வெளியீடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டலில் வரும் எம்.ஜி.ஆர். படம்

இந்நிலையில், இவரின் ‘சிரித்து வாழ வேண்டும்’ என்ற திரைப்படத்தையும் நவீன டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றுகின்றனர். இந்த படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்நாடு முழுவதும் திரைக்கு கொண்டு வருகின்றனர். 1974 இல் வெளியான இந்த படத்தில் எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். லதா நாயகியாக நடித்திருந்தார்.

Categories

Tech |