தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் நடிகை திரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இந்த படத்திற்குப் பிறகு நடிகை திரிஷாவின் மார்க்கெட் உயர அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளது. அதன்பிறகு சூர்யா வங்காலா இயக்கத்தில் பெங்கா என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.
இந்த வெப் தொடரின் முதல் பாகப்பணிகள் முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நடிகர் திரிஷா தன்னுடைய twitter பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். அவர் இந்த தொடரில் நடித்த அனைவருக்கும் நன்றி. இத்தொடர் விரைவில் வெளியாகும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவின் மூலம் நடிகை திரிஷாவின் பிருந்தா வெப் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
And it’s a wrap💥
Thank you to each and every one who worked by,with and for #Brinda
Season 1 on its way…..😇 pic.twitter.com/6K3pBiWYdi— Trish (@trishtrashers) November 22, 2022