Categories
சினிமா தமிழ் சினிமா

”2_ஆவது பேபிக்கு தயார்” மீண்டும் அப்பாவாகும் பாபி சிம்ஹா ….!!

பாபி சிம்ஹா- ரேஷ்மி மேனன் தம்பதிக்கு 2017ஆம் ஆண்டு பிறந்த பெண் குழந்தைக்குப் பிறகு இரண்டாவதாக குழந்தை பிறக்கவுள்ளது. இதைத்தொடர்ந்து ரேஷ்மி மேனனுக்கு வளைக்காப்பு நடைப்பெற்றது.

தேசிய விருது பெற்ற நடிகரான பாபி சிம்ஹா கடந்த 2015ஆம் ஆண்டு ‘உறுமீன்’ படப்பிடிப்பில் நடிகை ரேஷ்மி மேனனை காதலித்து 2016ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு 2017ஆம் ஆண்டு பாபி சிம்ஹா- ரேஷ்மி மேனன் தம்பதிக்கு முத்ரா என்ற பெண் குழந்தை பிறந்தது. இப்போது இத்தம்பதியினர் இரண்டாவது குழந்தைக்கும் தயாராகியுள்ளனர். தற்போது ரேஷ்மியின் வளைக்காப்பானது சொந்த பந்தங்கள் சூழ சிறப்பாக நடைபெற்றது.

Bobby simha and Reshmi menon

இதைத்தொடர்ந்து மகிழ்ச்சியில் உள்ள ரேஷ்மி தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் ‘என் வாழ்வின் ஒவ்வொரு நாளிலும் என்னை புன்னகைக்கச்செய்து, புதிய அர்த்தம் கொடுக்கும் இந்தக் குட்டி தேவதையுடன் இன்னொரு தேவதை சேரப்போகிறார். ஆசிர்வாதமாக உணருகிறேன், பேபி நம்பர் 2, உனக்காக நாங்கள் தயாராக இருக்கிறோம்’. என்று பதிவிட்டிருந்தார்.

https://www.instagram.com/p/B3kKWGpBC6J/?utm_source=ig_web_copy_link

Categories

Tech |