இலங்கையில் பள்ளிச் சிறுவர்கள் உட்பட 23 நபர்களுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 7 நபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையிலுள்ள, திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா-குருஞ்சான்குளத்திற்கு இடையில், புதிதாக பாலம் கட்டப்பட்டு வருகிறது. படகு வழியாக தான் மக்கள் சென்று வந்துள்ளனர். எனவே, வழக்கமாக செல்லும் ஒரு படகு, இன்று காலையில் பள்ளி சிறுவர்கள் உட்பட 23 நபர்களை ஏற்றிச் சென்றுள்ளது.
அப்போது, திடீரென்று படகு கவிழ்ந்து விபத்துகுள்ளாகி, ஏழு நபர்கள் பரிதாபமாக பலியாகினர். அதன்பின்பு, மீதமிருந்த 16 நபர்களையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதில் மூவர் உயிருக்கு போராடி நிலையில் இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.