Categories
ஆன்மிகம் இந்து கதைகள் பல்சுவை

கடவுள் ஏன் நீல நிறத்தில் இருக்கிறார்….? முன்னோர் சொன்ன ரகசியம் இதோ….!!

இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கக் கூடியவை கோவில்களாக இந்துமத கோவில்கள் திகழ்கின்றன. இந்தியாவில் அனைத்து பகுதியிலும் இருக்கக்கூடிய இந்துமத கோவில்களில் இருக்கும் கருவறை சிலை கருப்பு நிறமாகவே இருக்கும். இந்த கருப்பு நிறத்திற்கு ஒரு வரலாறு உண்டு. பூமி உருவான இடமான அண்டம் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கும். ஆகவே கருப்பு நிறத்தில் இருந்து தான் உலகம் உருவாகி, மனிதர்களாகிய நாமும் படைக்கப்பட்டோம்.

இதனை மையமாக வைத்தே இந்துக் கடவுளின் சிலைகள் கருமை நிறத்தில் வடிவமைக்கப்பட்டன. இது கோவில்களுக்குள் சரி, கோவிலை பொறுத்தவரையில் கடவுள் சிலை கருப்பாகத்தான் இருக்கும். ஆனால் நிஜ வாழ்க்கையில் புகைப்படங்களிலும், சினிமாக்களிலும் கடவுளை கருப்பு நிறத்தில் காட்சிப்படுத்துவது இல்லை. அதற்கான காரணம், நிஜவாழ்க்கையில் கருப்பு நிறம் துயரத்தையும், மரணத்தையும்  குறிக்க கூடியதாக இருக்கிறது.

இந்துக் கடவுளின் மிக உயர்ந்த கடவுளில் ஒருவராக கருதப்படும் பகவான் விஷ்ணு அவரது அனைத்து அவதாரங்களிலும் பெரும்பாலும் நீல நிறத்துடன் காட்சியளிப்பார். அவர் அவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டதன் காரணம் என்னவென்று சற்று அன்னார்ந்து பார்த்தாலே உங்களுக்கு புரிந்துவிடும். நம் தலைக்கு மேலே எல்லையற்று காட்சி அளிக்கக்கூடிய வானம் ஒளிசிதறல் விளைவால் நீல நிறத்தில் காட்சி அளிக்கின்றன. அந்த வானம் எல்லையற்றதாக இருப்பதை போல்,

நாம் வணங்கக்கூடிய கடவுள்களுக்கு இருக்கும் சக்தியும் எல்லையற்றதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் நீல நிறம் முன்னோர்களால் கொடுக்கப்பட்டது என கூறப்படுகிறது. கோவில் கருவறையில் சிலைக்கு கருப்பு நிறம் கொடுத்ததாக இருக்கட்டும், நிஜ வாழ்க்கையில் புகை படத்திற்கும் சினிமாவிலும் கடவுளுக்கு நீலநிறம் கொடுக்கப்பட்டதாயினும் நமது முன்னோர்கள் அனைத்திலும் அர்த்தங்களை வைத்தே கொடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Categories

Tech |