Categories
உலக செய்திகள்

ப்ளூ டிக்கிற்கு கட்டணம் செலுத்தும் முறை…. 29-ஆம் தேதி முதல் நடைமுறை…. வெளியான அறிவிப்பு…!!!

ட்விட்டரில் அதிகாரப்பூர்வமான கணக்கை குறிக்கும் நீல நிற குறியீட்டிற்கு கட்டணம் செலுத்தும் முறையானது வரும் 29ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உலக பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கிவிட்டார். அதனை தொடர்ந்து அதிரடியாக அதில் பல மாற்றங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில் ஒருவரின் கணக்கு அதிகாரப்பூர்வமானது தான் என்பதை குறிக்கும் நீல நிற குறியீட்டை வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு மாதமும் 1600 ரூபாய் வரை செலுத்த வேண்டும் என்று அறிவித்தார்.

இதனை பலரும் எதிர்த்தனர். அமெரிக்காவில் பலர் கண்டனம் தெரிவித்தார்கள். இந்நிலையில் கட்டணத்தை குறைப்பதாக கூறி அறிவித்து ஒவ்வொரு மாதமும் 660 ரூபாய் செலுத்த வேண்டும் என்று அறிவித்தார். கட்டணம் செலுத்தும் கணக்குகள் கொண்டிருப்பவர்கள், அதிக நேரத்திற்கு வீடியோக்கள் பதிவிட முடியும் என்று சலுகை வழங்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில், இதற்கு 719 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் முதலில் ஐபோன் பயன்படுத்துபவர்களுக்கு இது வழங்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. எனினும் இந்த நீல நிற கட்டண சேவையை தவறாக பயன்படுத்தும் பட்சத்தில், அவர்களின் கணக்குகளை மொத்தமாக முடக்கி விடுவோம் என்று எலான் மஸ்க் தெரிவித்தார்.

இந்நிலையில் எலான் மஸ்க், இன்னும் சில மாதங்களில் கட்டணம் செலுத்தாத நீல நிற குறியீடு வைத்திருக்கும் கணக்குகளை நீக்கி விடுவோம். அதாவது இதற்கு முன்பே நீல நிற குறியீடு வசதியை பயன்படுத்துபவர்கள் அதனை தொடர்ந்து பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும். அதன் பிறகு ட்விட்டரில் குறிப்பிட்டிருக்கும் அதிகாரப்பூர்வமான பெயரை யாரேனும் மாற்றினால் நீல நிற குறியீட்டை இழக்க நேரிடும்.

அதனை நாங்கள் சேவை விதிகளுக்கு உட்படுத்தி உறுதி செய்யும் வரை அந்த பெயரை திரும்ப பெற முடியாது என்று கூறியிருக்கிறார். இந்த அறிவிப்பை வெளியிட்ட பிறகு, போலி கணக்குகள் நீல நிற குறியீட்டுடன் இருப்பது தெரிந்ததால் 11-ஆம் தேதி அன்று தற்காலிகமாக நீல நிற கட்டண குறியீட்டு சேவை நிறுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தற்போது வரும் 29ஆம் தேதியிலிருந்து நீல நிற குறியீடு, கட்டணம் செலுத்தும் விதியுடன் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Categories

Tech |