சமூக வலைதளமான Twitter நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அந்த வகையில், டுவிட்டரில் முக்கியமான பிரபலங்களுக்கு மட்டும் வழங்கப்படும் ப்ளூ டிக் முறைக்கு கட்டண முறையை அறிமுகப்படுத்தினார். அதன்படி மாதம் 8 டாலர் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று மஸ்க் அறிவித்தார். இந்நிலையில் வெரிஃபைட் அக்கவுண்டுகளுக்கு official லேபிள் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த லேபிள் முறை அரசாங்கங்கள் மற்றும் முன்னணி செய்தி நிறுவனங்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது. இந்த புதிய முறை ப்ளூ டிக் வசதிக்கு கட்டணம் அறிமுகப்படுத்தப்படும் போது அமலுக்கு வரும். இந்த கட்டண முறையில் பலவிதமான மாற்றங்களை கொண்டு வருவதை டுவிட்டரின் பிராடக்ட் பிரிவு அதிகாரி எஸ்தர் கிராஃபோர்டு உறுதிப்படுத்தி இருக்கிறார். இந்நிலையில் ப்ளூ டிக் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு வெரிஃபைடு லேபிள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எவ்வித சோதனைகளும் மேற்கொள்ளப்படாததால் பலரும் எதிர்ப்புகளையும், வருத்தங்களையும் தெரிவித்து வருகிறார்கள். இதனையடுத்து ஏற்கனவே ப்ளூடிக் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு official லேபிள் வழங்கப்பட மாட்டாது. இந்த லேபிளை பணம் கொடுத்து யாராலும் வாங்க முடியாது. மேலும் டுவிட்டர் நிறுவனத்தின் official லேபிள் முன்னணி செய்தி நிறுவனங்கள், வியாபாரங்கள், வர்த்தக நிறுவனங்கள், முதன்மையான அரசாங்கங்கள் போன்றவைகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.