Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இரத்தம் தெறிக்கும் ”ஃப்ரீ ஃபயர்”… வன்முறையை தூண்டுது… தடை செய்ய முடியல… நீதிபதிகள் வேதனை

அண்மைக்காலங்களாகவே செல்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏராளமான ஆன்லைன் விளையாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் பல இளைஞர்கள், குழந்தைகள், பெரியவர்கள் என ஏராளமனனோர் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி இருக்கின்றனர். அதில் ஃப்ரீ ஃபயர் விளையாட்டு என்பது குழந்தைகளிடம் வன்முறையை தூண்டுவதாக இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறி இருக்கிறது.

நாகர்கோவிலை சேர்ந்த ஐரின் அமுதா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தனது மகள் மொபைல் போனில் பிரீ பையர் கேம் விளையாடிய அவர் நண்பருடன் சென்று விட்டதாகவும்,  எனது மகளை மீட்டுத் தரக் கோரியும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பாக விசாரணை வந்தது.

இந்த வழக்கில் நீதிபதிகள் கூறியதாவது:

கொரோனா காலகட்டம் இளைய தலைமுறையினருக்கு சோதனை காலகட்டமாக அமைந்துவிட்டது. ஆன்லைன் வகுப்பு நடைபெற்றபோது பலர் மொபைல் வாங்கி ஆன்லைன் விளையாட்டு மோகத்தில் மூழ்கியுள்ளனர். நிஜ வாழ்க்கையை ஏற்க மறந்து,  ஆன்லைன் விளையாட்டு எனும் தனி உலகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆன்லைன் விளையாட்டுகளை எப்படி தடை செய்தாலும் வேறு வேறு பெயர்களில் அது மீண்டும் வந்து கொண்டே இருக்கின்றது. இதனை முழுமையாக தடை செய்வது என்பது முடியாத காரியம் ஆகும். குழந்தைகள், பெற்றோர்கள் மொபைலில் மூழ்கியுள்ளதால் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதே இல்லை. ஃப்ரீ ஃபயர் விளையாட்டில் ரத்தம் தெறிப்பது  போன்ற காட்சிகள் குழந்தைகளிடம் வன்முறையை தூண்டும் விதமாக அமைந்துள்ளது. தற்போது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் அவரவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |