Categories
உலக செய்திகள்

“இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு” நீடிக்கிறது பதற்றம் ….!!

இலங்கை தலைநகர் கொழும்புவில்  மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறி இருப்பது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இலங்கையில் கொழும்பு நகரில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் கடந்த 21-ந் தேதி அடுத்தடுத்து என 8 குண்டுகள் வெடித்தது. இந்த கொடூர தாக்குதலுக்கு 359 பேர் பரிதாபமாக பலி ஆகினர். மேலும் 500_க்கும் அதிகமானோர்  காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலை நிகழ்த்தியது நாங்கள் தான் என்று ISIS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுகொண்டது.

இந்த தாக்குதல் குறித்து உளவுத்துறை எச்சரிக்கையை நாங்கள் கண்டு கொள்ளாமல் இருந்ததே தாக்குதலுக்கு  காரணம் என இலங்கை அரசு மக்களிடம் மன்னிப்பு கேட்டது.மேலும் இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு , அவசரநிலை பிரகடனம் செய்து , தாக்குதல் தொடர்பாக 40க்கு அதிகமானோரை இலங்கை அரசு கைது செய்துள்ளது.இந்நிலையில் கொழும்புவில் இருந்து சுமார் 40 கி.மீட்டர் தொலைவில் இருக்கும் புகோடா நகரில் உள்ள நீதிமன்ற கட்டிடத்திற்கு பின்பகுதியில் சிறிய அளவிலான குண்டு வெடித்துள்ளதாக  வெளியாகியுள்ளது.இது மீண்டும் இலங்கை மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |