இந்துக் கடவுள் குறித்து அவதூறாகப் பேசியதன் காரணமாக, காரப்பன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் சிறுமுகை பகுதியில் ஜவுளி நிறுவன முதலாளியும், தேசிய கைத்தறி நெசவுப் பயிற்சியாளருமான காரப்பன் என்பவர், சில நாட்களுக்கு முன்பாக அந்த மாவட்டத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று இந்துக் கடவுள்கள் குறித்து அவதூறாக பேசிய சர்ச்சை வீடியோ சமூக வலைதளங்களில் அதிவேகமாக வைரலாகி வருகிறது. இதற்குப் பல்வேறு இந்துதுவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழ்நிலையில், பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தற்பொழுது கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல்,
அவரது துணி கடையில் இந்து அமைப்பை சேர்ந்த மற்றும் இதர இந்துக்கள் யாரும் ஜவுளி வாங்க வேண்டம் என சமூக வலை தள பக்கங்களில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இந்துக் கடவுள்களை குறித்து அவதூறாகப் பேசியதன் காரணமாக, காரப்பன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து முன்னணி செயற்குழு உறுப்பினர் நிர்மல்குமார் என்பவர், கோவை பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில்விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.