Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

தோசை…. இட்லி… மாவு…. கருப்புக்கு என்னைக்கும் பவர் அதிகம்….. நிரூபித்து கட்டிய உளுந்து…!!

கருப்பு உளுந்தில் உள்ள மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

தற்போது உளுந்து என்றாலே நம் நினைவுக்கு வருவது வெள்ளை உளுந்து தான்.  கருப்புஉளுந்து நமது சிறு வயதிலோ அல்லது நமது தாய் தந்தையரின் இளம் வயது காலகட்டத்தில் தான் அதிகம் பயன்படுத்தியிருப்பர். கருப்பு உளுந்தை தற்போது பெரும்பாலானோர் பயன்படுத்துவது இல்லை.

ஆனால் வெள்ளை உளுந்தை விட கருப்புஉளுந்துக்கு தான் அதிக சத்து  என்பது இருக்கிறது. கருப்பு உளுந்து இட்லி, தோசை மாவு அரைக்க பயன்படுத்தலாம். இதன் கருப்பு தோலில் அதிக அளவு பாஸ்பரசும், கால்சியமும் சம அளவில் உள்ளன. இதனால் இட்லி மாவு புளிப்பதற்கு இதுவே காரணமாக இருக்கிறது. நம் முன்னோர்களின் பாரம்பரிய உணவுகள் சுவையாக மட்டுமல்லாமல்,அறிவியல் காரணத்தோடு தான் இருக்கின்றன என்பதற்கு கருப்பு உளுந்து ஒரு சிறந்த சான்று.

Categories

Tech |