Categories
தேசிய செய்திகள்

கருப்பு பூஞ்சை தொற்றுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும்… பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்…!!

கருப்பு பூஞ்சை தொற்றுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் சூழலில் கருப்பு பூஞ்சை தொற்று தற்போது பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து கொண்டு வருகின்றது. இந்தியாவில் தற்போது அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு வழங்கப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு கருப்பு பூஞ்சைத் தொற்றுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்: “கருப்பு பூஞ்சை தொற்றுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும். ஆம்போடெரிசின்-பி மருந்து கருப்பு பூஞ்சைத் தொற்றுக்கு மிகவும் அவசியமானது. இருப்பினும் இந்த மருந்துக்கு சந்தைகளில் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |