பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 44 வயதுடைய ஆண் ஒருவர் கருப்பு பூஞ்சை நோய் காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் பெரம்பலூர் தாலுகா பகுதியை சேர்ந்த 82 வயது முதியவர் ஒருவர் கருப்பு பூஞ்சையால் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் பெரம்பலூர் மாவட்ட சுகாதாரத் துறையினருக்கு அவர்கள் கருப்பு பூஞ்சை நோயால் தான் இருந்தார்களா ? என்பது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இன்னும் வரவில்லை. ஏற்கனவே பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிகாடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும், குன்னம் பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் கருப்பு பூஞ்சை நோய் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.