விழுப்புரம் மாவட்டம் ”கண்டமங்கலம்” புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது. சில மர்ம நபர்கள் இரவோடு இரவாக அண்ணாவின் திருவுருவ சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து, அதனுடன் ஆ ராசாவின் புகைப்படத்துக்கு கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி அதில் செருப்பை போட்டு, பேரறிஞர் அண்ணாவின் கழுத்தில் மாலையாக அணிவித்துள்ளனர்.
மேலும் அண்ணாவின் சிலை, தலைப்பகுதி மற்றும் கை பகுதிகளை கல்லால் குத்தி, அதனை உடைக்க முயற்சி செய்துள்ளனர். திமுகவின் கொடியால் அண்ணாவின் முகத்தை சுற்றி வைத்து அவமதித்துள்ளனர். இதனால் இந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தற்போது போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.