Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பாஜகவின் ”வேல் யாத்திரை” – நீதிமன்றம் சரமாரி கேள்வி …!!

பாஜகவின் வேலை யாத்திரையில் தலையிடக்கூடாது என தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக பாரதிய ஜனதா கட்சி நடத்தும் வேல் யாத்திரையில் தமிழக அரசும், காவல்துறையும் தலையிடக்கூடாது,  100 பேருக்கு மேல் செல்லக்கூடாது என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கரு. நாகராஜன் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தொடர்ந்த வழக்கு இன்று காணொளி மூலமாக விசாரணைக்கு வந்தது. அப்போது டிஜிபி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கடந்த 3 நாட்களாக பீஜேபி தரப்பில் நடத்தப்பட்ட வேல் யாத்திரை எவ்வாறு சென்று கொண்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.

அதே போல இது ஒரு கோவிலுக்கு செல்ல கூடிய ஒரு புனித யாத்திரையாக தெரியவில்லை. முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்திற்க்கானதாக தெரிகிறது. பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு மதியம் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பிலும், டிஜிபி தரப்பிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதில், ஓசூரில் இன்று நடைபெறும் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதைப் பதிவு செய்த நீதிபதிகள் அரசு, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்காத நிலையில், காத்திருக்காமல் தொடர்ந்து யாத்திரை மேற்கொண்டால் என்ன அர்த்தம் ? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். அதேபோல அனுமதி பெறும் வரை காத்திருக்க முடியாதா என்றும் கேள்வி எழுப்பினார்கள். அதே போல வேல் ஒரு தடை செய்யப்பட்ட ஆயுதம் என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டி கொரோனா தடுப்பு விதிகளுக்கு உட்பட்டு அனைத்து தரப்பையும் சமமாக கருதவேண்டும் என்றும் காவல் துறைக்கும் ஒரு அறிவுரை வழங்கினார்கள்.

Categories

Tech |