பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, கமலுக்கு அழைப்பு விடுத்தது, தமிழகத்தில் பா.ஜ.க. ஊடுருவ முயற்சி என வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து வரும் மே -30 ஆம் தேதி இரவு 7 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் மீண்டும் பிரதமர் மோடி பதவியேற்கிறார். இவ்விழாவில் உலக தலைவர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்களும் பங்கேற்க உள்ளனர். தமிழக முதல்வர் இ.பி.எஸ், துணை முதல்வர் ஓ.பி.எஸ் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதே போல நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்கு ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனுக்கு அழைப்பு விடுத்திருப்பது தமிழகத்தில் பாஜக ஊடுருவ மேற்கொள்ளும் முயற்சி என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக தலைவர் வைகோ தெரிவித்துள்ளார்.