Categories
தேசிய செய்திகள்

“முதல்வர் கெஜ்ரிவால் தீவிரவாதி”… மீண்டும் சர்ச்சையை கிளப்பும் பா.ஜ.க எம்.எல்.ஏ..!!

பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஓ.பி.சர்மா, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஒரு தீவிரவாதி என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி வளர்ச்சித் திட்டங்களை முன்னிறுத்தி பிரசாரம் செய்தது. ஆனால் பாரதிய ஜனதா வெறுப்பு அரசியலை வைத்து பிரச்சாரம் செய்தது. குறிப்பாக இந்த தேர்தல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடக்கும் தேர்தல் என்று மிகவும் மோசமாக பிரச்சாரம் செய்த நிலையில் தான் மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலை மூன்றாவது முறையாக முதல்வராக அரியணையில் ஏற்றி வைத்துள்ளனர் என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவந்தனர்.

இந்தநிலையில் தேர்தல் நடந்து முடிந்த பின் மீண்டும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஓ.பி.சர்மா சர்ச்சை பேசியுள்ளார். அதாவது அவர், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தீவிரவாதி.” என்று பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |