Categories
மாநில செய்திகள்

அரசுடன் இணைந்து சேவை செய்யுங்க – பாஜகவினருக்கு அண்ணாமலை அட்வைஸ் ..!!

பருவமழையை அடுத்து அரசுடன் இணைந்து பாஜகவினர் மீட்பு பணியில் ஈடுபட வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கூட்டத்தில் விரைவில் நடைபெற உள்ள உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து, விவுங்களை வகுப்பது குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

புதன்கிழமை தமிழக பாஜக இளைஞரணி மற்றும் மகளிர் அணி சார்பில் மாநிலம் முழுவதும் மாபெரும் போராட்டம் நடைபெற இருப்பதாக அவர் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழையை அடுத்து பாஜகவினர் தமிழக அரசுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

Categories

Tech |