குஜராத் மாநிலம் துவாரகாவில் இருந்து போர்பந்தர் வரை பாஜகவினர் 2-வது நாளாக பாதயாத்திரை மேற்கொண்டனர். இந்த பாதயாத்திரையின் போது கொடியேற்றும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா கலந்து கொண்டார். அதன்பிறகு ஜே.பி நட்டா விழாவில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, ஒரு காலத்தில் அரசியல் என்றாலே ஊழல் என்றுதான் இருந்தது. பதவியில் இருந்து கொண்டே பொதுமக்களை ஏமாற்றினர்.
ஆனால் பிரதமர் நரேந்திர மோடி இப்படிப்பட்ட கலாச்சாரத்தை மாற்றி பொது மக்களுக்கு சேவை செய்தார். பாஜகவை தவிர வேறு எந்த ஒரு தேசிய கட்சியும் இந்தியாவில் கிடையாது. காங்கிரஸ் கட்சி சுருங்கி விட்டது. அது இனி தேசிய கட்சி கிடையாது. சகோதர, சகோதரிகளின் கட்சி என்றார். மேலும் காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி மற்றும் அவருடைய சகோதரி பிரியங்கா காந்தியை மறைமுகமாக ஜே.பி நட்டா மறைமுகமாக சாடியுள்ளார்.