Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் பாஜக நன்றாக வளர்ந்து வருகிறது”…. மத்திய அமைச்சர் செம ஹேப்பி….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராம் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் மோடி 2.0 எனும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் கலந்து கொண்டார். அதன்பின் அமைச்சர் பூபேந்தர் யாதவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கோயம்புத்தூரில் உள்ள 2 துறைகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளேன். மத்திய அரசு வேளாண் காட்டை அதிகரிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருவதால், விவசாயிகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் வருமானம் அதிகரிக்கும். நம்முடைய விஞ்ஞானிகள் சிறந்த முறையில் பணிபுரிந்து வருகிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சதுப்பு நில பாதுகாப்புக்கு பணிபுரிந்து வருகிறது. நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 சதுப்பு நில காடுகள் இணைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தமிழ்நாட்டுக்காக பல்வேறு விதமான நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திமுக கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக சட்ட விரோதமான பல கருத்துக்களை கூறி வருகிறார்கள். இதில் குறிப்பாக இந்து சமூகத்தின் உணர்வுகளை கேட்பதற்கு யாருமே தயாராக இல்லை.

பாஜக கட்சியின் நிர்வாகி என்ற முறையில் திமுகவினரை நான் கடுமையாக கண்டிக்கிறேன். திமுகவை எதிர்த்து கேள்வி கேட்கும் பாஜகவினரும் கைது செய்யப்படுகிறார்கள். இது திமுக அரசின் ஜனநாயகமற்ற தன்மையை மட்டுமே காட்டுகிறது. ‌ அதன் பிறகு தமிழகத்தில் பாஜக கட்சியானது நன்றாக வளர்ந்து வருவது தெரிகிறது.

நாங்கள் தனி மனித உரிமைகளுக்காக போராட இருக்கிறோம். வனப்பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்க திட்டமிட்டதில், 1.9 சதவீதம் வனப்பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விலங்குகள் மற்றும் மனித மோதல் என்பது மிகவும் ஆபத்தான ஒன்று என்பதால், இதற்கான அறிக்கை ஆய்வுக் கூட்டத்தில் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் வனவிலங்குகளை பாதுகாப்பதற்கும் யானைகள் ரயிலில் அடிப்பட்டு உயிரிழப்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்

Categories

Tech |