பாஜக இலங்கையில் கட்சி தொடங்குவதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் அதை அனுமதிக்க முடியாது என்று இலங்கை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பாஜகவை இலங்கை மற்றும் நேபாள நாட்டில் விரிவுபடுத்த உள்ளதாக திரிபுரா மாநில முதல்வர் பில்லப் குமார் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.இந்த விவகாரம் இலங்கை, நேபாளில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுஇலங்கை தேர்தல் ஆணையர் நிமல் புஞ்சிவேவா, திரிபுரா முதல்வரின் கருத்திற்கு விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில் எந்தவொரு இலங்கை அரசியல் கட்சிகளும் அல்லது குழுவும் வெளிநாடுகளில் உள்ள எந்தவொரு கட்சியுடனும் அல்லது குழுவுடனும் வெளிப்புற தொடர்புகளை வைத்திருக்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் வெளிநாட்டு அரசியல் கட்சிகள் இங்கு செயலாற்ற இலங்கை தேர்தல் சட்டங்கள் அனுமதிக்கவில்லை”என்று அவர் தெரிவித்தார்