சிதம்பரத்தில் பாஜகவினருக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த விசிகவினரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
சிதம்பரத்தில் திருமாவளவனை கண்டித்து பாஜக வினர் இன்று குஷ்பு தலைமையில் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தார்கள். இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. அதே சமயத்தில் பாஜக போராட்டம் நடத்தினால் அதே இடத்தில் விடுதலை சிறுத்தை மகளிர் அணியும் போராட்டம் நடத்தும் என விடுதலைச் சிறுத்தைகள் அறிவித்தது. இதனால் ஒரு பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து சிதம்பரத்தில் எந்தவிதமான போராட்டத்திற்கு அனுமதி இல்லை என காவல்துறை அறிவித்தது. இருந்தாலும் அனுமதியை மீறி போராட்டத்தை நடத்தப்போவதாக பாஜகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அறிவித்தது.
இதனையடுத்து கடலூர் மாவட்டம் முழுவதும் கிட்டத்தட்ட 1,500 போலீசார் குவிக்கப்பட்டார்கள். அதே போல போராட்டத்திற்கு வரும் நடிகை குஷ்புவை மாவட்ட எல்லையில் வைத்து கைது செய்ய காவல்துறையினர் திட்டமிட்டு இருந்தனர். இந்நிலையில் சென்னையில் இருந்து கிளம்பிய குஷ்புவை முட்டுக்காடு அருகே அவர் கைது காவல்துறையினர் கைது செய்து காவல்நிலையம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
இந்நிலையில்தான் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் அதன் நிர்வாகிகளை காவல்துறை கட்டாயப்படுத்தி கைது செய்தார்கள். அதுமட்டுமல்லாமல் அந்த இடத்திற்கு பாஜகவினர் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தபோது அவர்களையும் போலீசார் கைது செய்திருக்கின்றார்கள். கடலூர் மாவட்ட எஸ்பி ஸ்ரீ அபிநவ கூறும்போது மாவட்டத்தில் பாஜகவினரோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியினரே போராட்டம் நடத்தக்கூடாது. அப்படி நடத்தினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கபடும் என்று கூறியுள்ளார்.