பூந்தமல்லி சிறையில் கைதியை பார்க்க கஞ்சாவுடன் வந்த இளம்பெண் காவல்துறையிடம் பிடிபட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த கரையான் சாவடியில் தனி கிளை சிறை அமைந்துள்ளது. சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற குற்ற சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்கள் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எண்ணூரில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட கார்த்திக் என்பவரும் அடைக்கப்பட்டுள்ளார். கார்த்திகை பார்ப்பதற்காக அவரது உறவுக்காரப் பெண் வளர்மதி பிஸ்கட் பழம் ஆகியவற்றை கொண்டு சிறைக்கு வந்தார்.
அதனை காவல்துறையினர் பரிசோதனை செய்த போது பிஸ்கட்டுகுள் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த பெண்ணை கைது செய்த பூந்தமல்லி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். சிறையில் உள்ள உறவினரை பார்க்க கஞ்சாவுடன் வந்த இளம்பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.