Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிறந்தநாள் கொண்டாட்டம்… வசமாக சிக்கிய நண்பர்கள்… வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

வாலிபர் பட்டாக்கத்தியினால் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

சென்னை மாவட்டத்திலுள்ள துரைப்பாக்கம் பகுதியில் வசிக்கும் வாலிபர் ஒருவர் தனது நண்பர்களுடன் இணைந்து பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளார். அப்போது நடுரோட்டில் வைத்து அந்த வாலிபர் பட்டாக்கத்தியினால் கேக் வெட்டிய வீடியோ சமூக வளைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து அறிந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கண்ணகி நகர் பகுதியில் வசிக்கும் சுனில் குமார் என்ற வாலிபர் தனது பிறந்தநாள் விழாவை நண்பர்களுடன் கொண்டாடியது தெரியவந்துள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுனில் குமார் மற்றும் அவரது நண்பர்களான கார்த்திக், ராஜேஷ், நவீன்குமார், தினேஷ், அப்பு ஆகிய 6 பேரை கைது செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அவர்களிடம் இருந்த பட்டாகத்தியை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |